நுவரெலியா மாவட்டத்தினுள் உள்ள வனவிலங்குகள் மற்றும் வன பாதுகாப்பு காப்பகங்களுக்குள் அனுமதியின்றி பிரவேசிப்பது தடை செய்யப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர்.நந்தன கலபட தெரிவித்துள்ளார்.
இதன்படி, நேற்று (04.08) முதல் மலையேறுதல் மற்றும் முகாமிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தலவாக்கலை கிரேட் வெஸ்டன் மலை உச்சியில் பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதையடுத்து வனவிலங்கு அதிகாரிகள், வன பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கு இடையில் நேற்று (04.08) விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
நுவரெலியா மாவட்டத்தில் உள்ள எந்தவொரு மலையிலும் ஏறுவதற்கு அந்த பிரதேசங்களில் அமைந்துள்ள அரச நிறுவனங்களின் அனுமதியைப் பெற வேண்டும் எனவும், அதன் பின்னர் குறித்த அனுமதியை அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் நுவரெலியா மாவட்ட செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.