வவுனியா காத்தார்சின்னக்குளத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டத்தினை நீர்வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்தாவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இலங்கையிலே சிறுநீரக நோயினால் அதிகம் பாதிக்கப்படும் இரண்டாவது மாவட்டமாக வவுனியா மாவட்டம் காணப்படுகின்றது. இதனை கருத்தில் கொண்டு நனோ சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அதன் அடிப்படையில் வவுனியா மாவட்டத்தில் நேற்றையதினம் (04.08) 16 கிராமங்களிலே குறித்த திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட சுத்திகரிப்பு நிலையங்கள் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கு. திலீபன், மாவட்ட செயலாளர் சரத்சந்திர, பிரதேச செயலாளர் நா.கமலதாசன் மற்றும் அரச உயர் அதிகாரிகள் மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்

