காலி- கொழும்பு போட்டி ஆரம்பம்

லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் கோல் டைட்டன்ஸ் மற்றும் கொழும்பு ஸ்ட்ரைக்கேர்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டி ஆரம்பமாகியுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்றுள்ள கொழும்பு அணி களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது.

கொழும்பு அணி இன்று வெற்றி பெறும் பட்சத்தில் சகல அணிகளும் 4 போட்டிகளில் விளையாடி தலா 4 புள்ளிகளை பெற்றுள்ள நிலை ஏற்படும். காலி அணி வெற்றி பெறும் பட்சத்தில் 6 புள்ளிகளுடன் முதலிடத்தை பெறும்.

அணி விபரம்

கோல் டைட்டன்ஸ்: ஷெவோன் டானியல், லசித் குரூஸ்புல்லே, பானுக ராஜபக்ச, டிம் செய்பேர்ட்(wk), ஷகிப் அல் ஹசன், தசுன் ஷானக (c), தப்ரைஸ் ஷம்சி, கசுன் ராஜித, அகில தனஞ்சய, மினோட் பானுக்க

கொழும்பு ஸ்ட்ரைக்கேர்ஸ் : நிரோஷன் டிக்வெல்ல (c), பாபர் அசாம், பத்தும் நிஸ்ஸங்க, நுவனிது பெர்னாண்டோ, சாமிக்க கருணாரட்ன, ரமேஷ் மென்டிஸ், மொஹமட் நவாஸ், நசீம் ஷா, மதீஷ பத்திரன, இசுரு உதான, லக்ஷன் சன்டக்கான்

Social Share

Leave a Reply