கலகொட அத்தே ஞானசாரா தேரர் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற தொனிபொருளில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவினால் உருவாக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை சட்டங்களையே மதிக்காத ஒருவரை இந்த செயலணிக்கு தலைவராக நியமித்தனை தான் தான் வன்மையாக கண்டிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள காணொளியில் இந்த தகவலை தெரிவித்துள்ளார். தற்போதுள்ள சட்டங்களை சரியாக நடைமுறை செய்தாலே பிரைச்சினைகள் தீர்ந்து விடும். அதனை விடுத்தது புதிதாக எதனையும் செய்ய தேவையில்லை.
இருக்கிற சட்டத்தை அனைவருக்கும் சரியாக நடைமுறைப்படுத்துங்கள். ஜனாதிபதிக்கு வேண்டப்பட்டவர்களுக்கு ஒரு சட்டம். தமிழ், முஸ்லீம் மக்களுக்கு எதிராக செயற்படுபவர்களுக்கு ஒரு சட்டம், தமிழ் முஸ்லீம் மக்களுக்கு ஆதரவாக செயற்படுபவர்களுக்கு ஒரு சட்டமும் என இல்லாமல் அனைவருக்கும் சமனான சட்டம் என்பதனை நடைமுறை செய்தாலே போதும். பிரைச்சினைகள் தீர்ந்து விடுமென பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
