காற்பந்தை காப்பாற்ற களமிறங்கும் திலங்க சுமதிபால!

இலங்கையின் காற்பந்தாட்டம் கடந்த காலங்களில் மிக மோசமகா நிர்வகிக்கப்பட்டதகவும், ஊழல் நிறைந்தவர்களினாலேயே பரிபாலனம் செய்யப்பட்டதாகவும், அவர்கள் இணைந்து தற்போது முகாமைத்துவம் செய்ய களமிறங்குவதாகவும் அதற்கு தாம் ஆதரவு வழங்க மாட்டோம் எனவும் இலங்கை இலங்கை சொக்கர் மாஸ்டர்ஸ் சங்கம் அறிவித்துள்ளது.

நேற்று(09.08) கொழும்பில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கடந்த காலத்தில் முகாமைத்துவம் செய்த்தவர்களினால் மேற்கொள்ளப்பட்ட ஊழல்கள் தொடர்பில் சில ஆவணங்கள் வெளியிட்டதோடு, முன்னாள் தலைவர் ஜஸ்வர் உமர் இலங்கை காற்பந்தாட்ட சம்மேளனத்தின் ஒரு ஊழியராக கடமையாற்றி பின்னர் செயலாளராக பதவி பெற்று தலைவர் பொறுப்பை பெற்றுக் கொண்டவர். தற்போது அவரது மனைவியின் பெயரில் அதி சொகுசு கார் ஒன்று உள்ளது. இது எவ்வாறு சாத்தியமானது என கேள்வி எழுப்பப்பட்டது?

கடந்த காலங்களில் இலங்கை காற்பந்தாட்ட வீழ்ச்சிக்கு காரணமான மூவரே தற்போது தாம் இணைந்து செயற்படுவதாகவும், கடந்த காலங்களில் தனித்து உண்ட கேக் துண்டை தற்போது மூவரும் இணைந்து உண்ண முயற்சிப்பதாகவும், அதற்கு தாம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் எனவும் தெரிவித்துள்ள சங்கம், தாம் வினைத்திறன் மிக்க புதியவர் ஒருவரை களமிறக்கவுள்ளதாகவும், அதனை அறிந்து அதற்கு பயந்தே பிரிந்து நின்ற மூவரும் தற்போது இணைந்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனுராதாபுர காற்பந்து லீக்கை பிரதிநிதித்துவம் செய்யும் திலங்க லக்ஷித சுமதிபாலவை தாம் காற்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் பதவிக்காக பரிந்துரை செய்து அவருக்கு ஆதரவு வழங்குவதாகவும், அவர் இலங்கையின் காற்பந்தை பாதுகாத்து வளர்ச்சிப் பாதைக்கு இட்டு செல்வார் எனவும் நம்பிக்கை வெளியிடப்பட்டது. 36 வயதான திலங்க லக்ஷித ஒரு காற்பந்து வீரர் எனவும், அனுராதபுரம் சுப்பர் ஜங் கழகத்தின் உப தலைவர் மற்றும் அனுராதுபுரம் காற்பந்து லீக்கின் தலைவர் எனவும், பல வியாபாரங்களை முகாமைத்துவம் செய்யும் தொழிலதிபர் எனவும், கொழும்பு ரோயல் கல்லூரி பழைய மாணவன் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டது. குறித்த நபர் நடைபெற்ற ஊடக சந்திப்புக்கு வருகை தந்திருக்கவில்லை.

அண்மையில் நடைபெற்ற இலங்கை காற்பந்து சம்மேளனத்தின் பொதுச்சபை கூட்டத்தை கூட்டுவதற்காக நடைபெற்ற கூட்டம் மற்றும் பிரிவினைகளின்றி அனைவரும் ஒரு அணியாக தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் நடைபெற்ற கூட்டத்தில் அனுராதபுரம் லீக் ஆதரவு வழங்கவுவதாக தெரிவித்திருந்தது. அந்த கூட்டத்தில் தமக்கு 64 லீக்குகளின் ஆதரவு இருப்பதாக தெரிவிக்கபப்ட்ட போதும், ஆதரவு வழங்கும் சகல லீக்குகளுக்கும் வாக்குரிமை இல்லை என நேற்றைய ஊடக சந்திப்பில் சொக்கர் மாஸ்டர்ஸ் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்து.

குறித்த சங்கத்துக்கும் காற்பந்தாட்ட சம்மேளனத்திற்கும் வாக்குரிமை இல்லாத நிலையில், தாம் திலங்க லக்ஷித தொடர்பில் சகல வாக்குரிமை உள்ள லீக்குகளுடனும் பேசி நிலைமைகளை எடுத்துரைத்து திலங்க லக்ஷிதவை வெற்றி பெற வைக்க முடியுமெனவும் நம்பிக்கை வெளியிடப்பட்டது.

Social Share

Leave a Reply