அண்மையில் மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்த இளைஞனின் இறுதி ஊர்வலத்தின் போது மோட்டார் சைக்கிள் கண்காட்சியில் ஈடுபட்ட நபர்களை எதிர்த்த மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் தாக்கப்பட்டுள்ள சம்பவம் வாத்துவ பகுதியில் பதிவாகியுள்ளது.
வாதுவ பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் ஒருவர் மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்த நிலையில், அவரது இறுதிக்கிரியை நேற்று (09.08) வாத்துவ மயானத்தில் இடம்பெற்றது.
30 மோட்டார் சைக்கிள்களில் வந்த இளைஞர்கள் குழு ஒன்று, இறந்தவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் வகையில், ஒரு சக்கரத்தில் மோட்டார் சைக்கிளை ஒட்டி (Wheeling) இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டுள்ளனர்.
அங்கிருந்த பலரும் குறித்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில், மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் அவ்வாறு மோட்டார் சைக்கிள் ஒட்டிய குழுவிற்கு அறிவுறுத்தியதால், குறித்த இளைஞர்களால் அவர் தாக்கப்பட்டு காயப்படுத்தப்பட்டுள்ளார்.
அங்கிருந்த மக்கள் அவரை பாதுகாப்பாக மீட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பவம் தொடர்பில் வாதுவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.