இந்து மகா சபை நடத்தும் சட்டகல்லூரியின் 2023 ஆம் ஆண்டுக்கான கலைவிழா, ஆகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இதில் பிரதம அதிதியாக மேல் முறையீட்டு நீதிமன்ற நீதிபதி, ஜஸ்டின் பிரபாகரன் குமாரரட்னம் கலந்துகொள்ளவுள்ளதுடன், சிறப்பு அதிதியாக ஜனாதிபதி ஆலோசகர் கனகேஸ்வரன், மற்றும் சட்டக் கல்லூரி அதிபர் அதுல பதிநாயக்கே ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
இந்நிகழ்வின்போது நக்கீரம் என்ற நூலும் வெளியிடப்படவுள்ளது.