நாட்டின் அரச வங்கிகளில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையில் ஊழல் மோசடிகள் தொடர்பான தகவல்கள் வெளிப்படுத்தப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த இலங்கை வங்கிகள் சங்கத்தின் தலைவர் சன்ன திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், இலங்கை வங்கியில் தடயவியல் தணிக்கையை மேற்கொள்ளுமாறு தற்போதைய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் இதுவரையில் அது மேற்கொள்ளப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்