இந்தியாவில் இலங்கை உயர்ஸ்தானிகராக பணியாற்றிய மிலிந்த் மொரகொடவின் பதவிக்காலம் முடிவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இரண்டு வருடங்களுக்கு அமைச்சரவை அதிகாரத்துடன் நியமிக்கப்பட்ட மிலிந்த் மொரகொட ஒக்டோபர் முதலாம் திகதி நாடு திரும்பவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 2021 இல் பதவியேற்ற அவர், இந்தியாவில் நிறுவப்பட்ட பணிகளுக்கான ஒருங்கிணைந்த தேசிய வியூகம் 2021-23 திட்டத்தையும் அறிவித்தார். இது பல்வேறு துறைகளில் இருமுனைத் திட்டத்தை வெளிப்படுத்தியது.
இலங்கை மிகவும் கடினமான காலகட்டத்தை எதிர்கொண்ட போது பொருளாதார மற்றும் முதலீட்டு உத்திகள் மூலம் இருதரப்பு உறவுகள் மேம்பட செயற்பாட்டார்.