நாடாளுமன்றில் பெண் ஊழியர்களை துஷ்பிரயோகம் செய்தவர் பணிநீக்கம்!

நாடாளுமன்றத்தின் பராமரிப்புப் பிரிவில் பணியாற்றும் பெண் ஊழியர்களை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியதாக குற்றம் சாட்டப்பட்ட பராமரிப்புத்துறை உதவிப் பணிப்பாளர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், நாடாளுமன்றத்தின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி குஷானி ரோஹணதீர அவரை பணி நீக்கம் செய்துள்ளார்.

 பாதிக்கப்பட்ட பணிப்பெண்கள் வழங்கிய தகவலை கவனத்தில் கொண்டு பராமரிப்புத்துறை உதவிப் பணியாளர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Social Share

Leave a Reply