கன்னட சூப்பர் ஸ்டார் மரணம்

கன்னட சூப்பர் ஸ்டாரான 46 வயதையுடைய புனித் ராஜ் குமார் இன்றைய தினம் எதிர்பாரத நிலையில் திடீரென மரணமடைந்தார்.

கன்னட சினி உலகின் சூப்பஸ்டாராக விளங்கும் புனித் ராஜ்குமார் உடல் நிலை ஆரோக்கியமாக இருந்ததுடன் பல திரைப்படங்களில் நடித்து வந்துள்ளார்.

இவர் பிரபுதேவாவின் தம்பி முதன்முறையாக இயக்கும் திரைப்படத்திலும் நடித்து வந்துள்ளார்.
இந்நிலையில் இன்றைய தினம் ஜிம் இல் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

இவர் நடிகர் மட்டுமல்லாது பின்னணிப்பாடகராகவும், தயாரிப்பாளராகவும் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் விளங்கியுள்ளார்.


இவரது உடல் பங்களுரில் உள்ள ஸ்ரீகன்ரிரரா மைதானத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படவுள்ளதாக கன்னட அரசு தெரிவித்துள்ளதுடன் இதன் காரணமாக பங்களுரில் இரண்டு நாட்களுக்கு மதுபானக்கடைகளை மூடுமாறும், குறித்த பிரதேசத்தில் பலத்த பொலிஸ்பாதுகாப்பு வழங்குமாறும்உத்தரவிட்டுள்ளது.

கன்னட சூப்பர் ஸ்டார் மரணம்

Social Share

Leave a Reply