நடிகர் ரஜினிகாந்துக்கு நேற்று சத்திர சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதனை காவேரி மருத்துவமனை உறுதி செய்துள்ளது. வழமையான சோதனைகளுக்காக வைத்தியசாலைக்கு சென்ற நிலையில் வைத்தியர்கள் சத்திர சிகிச்சை செய்ய வேண்டுமென கோரியதற்கிணங்க இந்த சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூளைக்கு இரத்தம் செல்லும் கழுத்து குருதி நாடியில் ஏற்பட்ட அடைப்பை சீர் செய்யும், சிறியதொரு சத்திர சிகிச்சையே இது. ரஜினியின் உடல் நலம் சீராக இருப்பதாகவும், விரைவில் வைத்தியசாலையில் இருந்து வீடு செல்ல அனுமதிக்கபப்டுவார் எனவும் வைத்தியசாலை அறிவித்துள்ளது.