கொழும்பில் உள்ள பழைய பாராளுமன்ற கட்டிடத்தில் நிறுவப்பட்டுள்ள நிதி அமைச்சில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
இரண்டாவது மாடியிலே இவ்வாறு தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் கொழும்பு மாநகரசபையின் தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்த தீப்பரவலுக்கான காரணம் மற்றும் சேத விபரங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.