காலிக்கு போராடக்கூடிய இலக்கு!

லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கான முதல் அணியை தெரி செய்யும் போட்டி தற்சமயம் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்தப் தொடரில் முதலிடத்தை பெற்றுக் கொண்ட தம்புள்ளை ஓரா மற்றும் இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்ட கோல் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற காலி அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. காலி அணி 20 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 146 ஓட்டங்களை பெற்றது.

தம்புள்ளை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பானுக ராஜபக்ஷ முதல் ஓவரிலேயே ஆட்டமிழக்க தம்புள்ளை அணியின் தடுமாற்றம் ஆரம்பமானது. இருப்பினும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் லசித் க்ரூஸ்புல்லே நிதானமான ஆரம்பத்தை வழங்கி அணியின் ஓட்ட எண்ணைக்கையினை அதிகரித்தார். ஷகிப் அல் ஹசனுடன் இணைந்து அரைச்சத இணைப்பாட்டத்தை வழங்கினார். ஷகிப் ஆட்டமிழந்ததும் மீண்டும் காலி அணி தடுமாறும் நிலைக்கு சென்றது.

பந்துவீசில் பினுர பெர்னான்டோ கடந்த போட்டிகள் போன்று சிறப்பான ஆரம்பத்தை வழங்கினார். அதன் பின்னர் நூர் அஹமட், தனஞ்சய டி சில்வா ஆகியோரும் சிறப்பாக பந்துவீசினார்கள். ஹெய்டன் கெர்ரின் பந்துவீச்சும் சிறப்பாக அமைந்தது. அத்தோடு இறுதி நேரத்தில் சிறப்பாக பந்துவீச்சு அமைந்தது.

இந்தப் போட்டியில் வெற்றி பெறுமணி எதிர்வரும் 20 ஆம் திகதி நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் விளையாடவுள்ளது. தோல்வியடையுமணி 19 ஆம் திகதி நடைபெறவுள்ள இரண்டாவது தெரிவுகாண் போட்டியில் விளையாடவுள்ளது.

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
பானுக்க ராஜபக்ஷபிடி- ஹெய்டன் கெர்பினுர பெர்னாண்டோ000200
லசித் க்ரூஸ்புல்லேRun Out 806170
லிட்டோன் டாஸ்பிடி- அலெக்ஸ் ரோஸ்ஹெய்டன் கெர்080710
ஷகிப் அல் ஹசன்பிடி- ஹெய்டன் கெர்தனஞ்சய டி சில்வா191730
தசுன் ஷானகபிடி- ஹெய்டன் கெர்நூர் அஹமட்120801
நஜிபுல்லா ஷர்டான்பிடி- துஷான் ஹேமந்தநூர் அஹமட்020300
லஹிரு சமரகோன்Bowledஹெய்டன் கெர்151211
சீகுஹே பிரசன்னRun Out 080510
லஹிரு குமாரபிடி- தனஞ்சய டி சில்வாஹெய்டன் கெர்000200
கசுன் ராஜிதRun Out 000200
ரப்ரைஸ் ஷம்சிL.B.Wஹசன் அலி000100
உதிரிகள்  02   
ஓவர்  20விக்கெட்  10மொத்தம்146   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்டவிக்
பினுர பெர்னாண்டோ04003301
ஹசன் அலி03002801
ஹெய்டன் கெர்03001813
தனஞ்சய டி சில்வா04002901
 நூர் அஹமட்04002702
துஷான் ஹேமந்த02001100

அணி விபரம்

தம்புள்ளை ஓரா : குசல் மென்டிஸ் (wk & c), அவிஷ்க பெர்னாண்டோ, குசல் பெரேரா, சதீர சமரவிக்ரம, அலெக்ஸ் ரோஸ், தனஞ்சய டி சில்வா, ஹெய்டன் கெர், பினுர பெர்னாண்டோ, நூர் அஹமட் , ஹசன் அலி, துஷான் ஹேமந்த

கோல் டைட்டன்ஸ்: பானுக்க ராஜபக்ஷ, லசித் க்ரூஸ்புல்லே, லிட்டோன் டாஸ், ஷகிப் அல் ஹசன், தசுன் ஷானக (c), லஹிரு சமரகோன், கசுன் ராஜித, லஹிரு குமார, நஜிபுல்லா ஷர்டான், சீகுஹே பிரசன்ன, ரப்ரைஸ் ஷம்சி,

Social Share

Leave a Reply