யாழ் – கண்டி ஏ9 வீதி விபத்து – ஒருவர் பலி!

யாழ் – கண்டி ஏ9 வீதியின் நவகம பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் வியாபாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் யாழ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

மோட்டார் இரு சக்கர வாகனமும் லொரி ஒன்றும் மோதிக் கொண்டதிலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 58 வயதான 2 பிள்ளைகளின் தந்தை ஒருவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் வவுனியாவிலிருந்து இரட்டைப்பெரியக்குளம் நோக்கி வீதியோரமாக பயணித்துக் கொண்டிருந்த போது எதிர் திசையில் வந்த லொரி வீதியை விட்டு விலகி மோதியதில் பலத்த காயங்களுக்கு உள்ளாகி வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்த்துள்ளார்.

விபத்து தொடர்பாக இரட்டைப்பெரியக்குளம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற அதே வேலை விபத்தை ஏற்படுத்திய லொரி சாரதியும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Social Share

Leave a Reply