கோழி இறைச்சி, முட்டையின் விலையையும் குறைக்க முடியும்!

மக்காச்சோளத்திற்கான இறக்குமதி வரியை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், எதிர்காலத்தில் ஒரு கிலோ கோழி இறைச்சியை 1200 ரூபாவிற்கு விற்பனை செய்ய முடியும் என கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. 

இரண்டு வாரங்களுக்குள் மக்காச்சோளத்தை இறக்குமதி செய்ய வாய்ப்பு உள்ளதாக அதன் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்தார்.  

இந்த சலுகைகள் மூலம் எதிர்காலத்தில் ஒரு முட்டையை 40 ரூபாவிற்கு விற்பனை செய்ய முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

Social Share

Leave a Reply