திங்கட்கிழமை முதல் வவுனியாவில் சுகாதர திணைக்கள ஊழியர்களுக்கு மூன்றாவது தடுப்பூசியான “பூஸ்டர்” என அழைக்கப்படும் தடுப்பூசிகள் ஏற்றப்படவுள்ளன.
அரசாங்கம் அறிவித்தது போன்று பைசர் தடுப்பூசிகளே மூன்றாவது ஊசிகளாக ஏற்றப்படவுள்ளன. முதற் கட்டமாக இரண்டாம் தடுப்பூசிகளை ஏற்றி 6 மாதங்களுக்கு மேற்பட்ட சுகாதர திணைக்கள உத்தியோகத்தர்களுக்கு இந்த ஊசிகள் ஏற்றப்படவுள்ளன.
எதிர்வரும் காலங்களில் இரண்டு தடுப்பூசிகளையும் ஏற்றிக்கொண்ட அனைவருக்கும் பைசர் தடுப்பூசிகள் மூன்றாவது ஊசியாக ஏற்றப்படுமென வவுனியா பிராந்திய சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.