கொடுப்பனவுகள் குறித்து நிதி இராஜாங்க அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!

சிறுநீரக நோயாளர்கள், ஊனமுற்றோர் மற்றும் குறைந்த வருமானம் பெறும் வயது வந்தோருக்கான ஜூலை மாதத்திற்கான கொடுப்பனவுகளுக்காக திறைசேரி அனைத்து மாவட்ட செயலகங்களுக்கும் 2,684 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கில் வெளியிட்டுள்ள குறிப்பில் இதனைக் தெரிவித்துள்ளார்.

இதன்படி முதியோர் கொடுப்பனவை தபால் நிலையங்களிலும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறுநீரக கொடுப்பனவுகளை பிரதேச செயலகங்களில் இருந்தும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply