Meningococcal – Meningitis குறித்து அச்சம் வேண்டாம்!

Meningococcal – Meningitis குறித்து மக்கள் தேவையில்லாத அச்சம் கொள்ள வேண்டாம் என தொற்றுநோயியல் துறை தெரிவித்துள்ளது.

காலி சிறைச்சாலையில் கைதிகள் குழுவொன்று திடீரென சுகவீனமடைந்த நிலையில் அவர்கள் குறித்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதன்படி, இந்நோய் பரவுவது தொடர்பில் மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என வைத்திய நிபுணர் டாக்டர் சமித்த கினிகே தெரிவித்துள்ளார்.

மேலும், ஒவ்வொரு வருடமும் இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அடையாளங்காணப்படுவதாகவும், இது கண்டறியப்படாத நோயல்ல எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நாம் நெருக்கமாக இருப்பவர்கள் மூலம் பரவுவதாகவும், இதனால் சமூகத்தில் எந்தப் பாதிப்பும் இல்லை எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Social Share

Leave a Reply