எதிர்க்கட்சி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாசவுக்கும் தனக்கும் பல கருத்து வேறுபாடுகள் உள்ளன. ஆனால் அனைத்து பாரளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து சஜித் பிரேமதாசவுக்கு சரியான பாதையினை காட்டினால் அவர் சரியாக செயற்படுவார் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோதெரிவித்துள்ளார் .
இன்று காலை 10 மணியளவில் கம்பஹா மாவட்டம், வத்தளையில் ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலக திறப்பு நிகழ்விலேயே இந்த கருத்தினை அவர் தெரிவித்துள்ளார்.
என்னுடைய திட்ட நடைமுறைகள் வேறு. சஜித் பிரேமதாசவினுடையது வேறு. ஆனால் சரியான முறையில் இந்த அரசியல் விளையாட்டை விளையாடினால் வெற்றி கிடைக்கும் என தெரிவித்த ஹரின் பெர்னாண்டோ, இள வயதினருக்கு வாய்ப்பு வழங்க 60 வயதோடு தன்னுடைய அரசியல் வாழ்விலிருந்து விலகிவிடுவேன் எனவும் அறிவித்துள்ளார். ஹரின் பெர்னாடோவுக்கு தற்போது 43 வயது என்பது குறிப்பிடத்தக்கது.