தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக ஜாஃபர், வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து, மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்து விட்டார்.
இவர் கடைசியாக ஜெயிலர் படத்தில் நடித்து முழு திறமையை வெளிப்படுத்தியிருந்தார்.
இதனிடையே ஜெயிலர் படத்தில் ரஜினி பயன்படுத்திய விலை உயர்ந்த கண்ணாடியை கொடுக்கும் படி, கேட்டதாகவும், உடனே ரஜினி அந்த கண்ணாடியை தனக்கு பரிசாக கொடுத்துவிட்டதாகவும் ஜாஃபர் தமது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு, கண்ணாடியின் புகைப்படத்தையும் இணைத்து இருக்கிறார்.
ஜெயிலர் படத்தில் ரஜினி பயன்படுத்திய கண்ணாடியை கேட்டதும் கொடுத்ததற்கு ஜாஃபர் நடிகர் ரஜினிகாந்துக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
திரைப்படத்தின் அதிக காட்சிகள் சுபே ஸ்டாருடன் நடித்து மக்கள் மனதில் தனி இடத்தை பிடித்தார் ஜாஃபர்.