நாட்டில் மீண்டும் ISIS அமைப்பினர் சுதந்திரமாக நடமாடுகிறார்களா?

இந்நாட்டுக்கு முதலீடுகள்,சுற்றுலா பயணிகளின் வருகைகளை அதிகமாக எதிர்பார்த்து இருக்கும் வேளையில் பொறுப்பு மிக்க பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் ISIS அமைப்பு இந்நாட்டில் சுதந்திரமாக நடமாடுவதாகவும், அவர்களை கைது செய்ய சட்டம் அவசியம் என்றும் கருத்துத் தெரிவித்தார்.

போதுமான சட்டம் நாட்டில் உள்ளது. அவ்வாறனவர்கள் இருந்தால் அவர்களை கைது செய்யுமாறு கோருகிறோம் என பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்த கருத்துக்களின் சாரம்சம் இதோ,

*இந்த பொறுப்பற்ற கருத்தால் முதலீட்டாளர்களும்,சுற்றுலாப்பயணிகளும் வருதற்கு அவர்கள் கொண்டுள்ள விருப்பம் நாட்டம் இல்லாது போகும்.

*சர்வதேச ஆதரவு அதிகமாக தேவைப்படும் இந்நேரத்தில் நீதிமன்றங்களுக்கு அச்சுறுத்தல்,சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு அச்சுறுத்தல் தலையீடுகள் போன்ற ஐனநாயக விரோத செயற்பாடுகளையும்,பொறுப்பற்ற செயல்களையும் அரசாங்க தரப்பினர் செய்து வருவதின் ஊடாக இந்த சர்வதேச ஒத்துழைப்பு எமக்கு கிடைக்காது போகும் என்பதை அறியாது செயற்படும் ஆளும் தரப்பு உறுப்பினர்கள் இருப்பது வேட்கக்கேடு.

*தேர்தலை இலக்காக் கொண்டே எமது நாட்டின் பிரதான அரச தலைவர்கள் செயற்பட்டு வருகின்றனர். மொட்டு ரணிலுக்கு காலைவாரும் செயற்பாடுகளையும் மேற்கொண்டு வருகிறது.

*அதேபோல ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து நான்கு பேர் ஐந்து பேர் அரசாங்க தரப்புக்கு தாவவுள்ளனர், ரணிலோடு இணைந்து பயணிக்க பெருன்பான்மையினர் விருப்பம் தெரிவித்துள்ளனர்,இணைந்து பயணிக்க ஐக்கிய மக்கள் சக்தியில் பலர் இருக்கின்றனர் என்று அரசாங்கம் செய்திகளை கட்டமைத்தனர்.பொய்யான கருத்துக்களை இவ்வாறு கட்டமைக்கின்றனர்.

*எல்லோருக்கும் சவாலாக சஜித் பிரேமதாச மாறியுள்ளார். நாம் மேலும் பலமடைந்துள்ளோம்.பலர் இணைந்து உள்ளனர்.அடுத்த ஜனாதிபதி தேர்தலை வெற்றிக் கொள்ளும் பரந்த கூட்டணியை நாம் உருவாக்குவோம்.

*ஐனநாயகம்,கருத்துத் தெரிவிக்கும் உரிமை என்பன பாராளுமன்றத்திற்குள்ளும் அதற்கு வெளியிலும் அச்சுறுத்தலுக்காளாகியுள்ளது. அரசியலமைப்புன் பிரகாரம் கருத்துத் தெரிவிக்கும் உரிமை அடிப்படை உரிமையாகும்.ஆனால் இந்த உரிமை சட்டமன்றத்திலும் அதற்கு வெளியிலும் இல்லாது போயுள்ளது.

*நேற்று பாராளுமன்ற உறுப்பினர் இருவர் சபை நடைவடிக்கைகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.காரணம் யாது? கருத்துத் தெரிவிக்கும் சுதந்திரத்திற்கான எதிர்ப்பின் விளைவே அதுவாகும்.

*இந்த ஆட்சிக்கு எதிராக குரல் எழுப்ப காலம் எழுந்துள்ளதாக மக்களுக்கு கூற விரும்புகிறோம்.நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான பாதையில் ஆளும் தரப்பினர் இல்லை.

*சுகாதார முறைகேடுகளுக்கு எதிராக மக்களுடன் இணைந்து வெற்றிகரமான செயற்திட்டதை நாடாளாவிய ரீதியில் நடத்தி வருகிறோம்.

*சுகாதார மோசடியோடு சேர்ந்து நெருக்கடியும் எழுந்துள்ளது,ஆனாலும் இதையும் நியாயப்படுத்தும் விதமாகவே அரசாங்கம் செயற்பட்டு வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply