மயக்க வாயுக்களுக்கு தட்டுப்பாடு!

நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் சத்திரசிகிச்சைக்கு முன்னர் நோயாளர்களுக்கு மயக்கமூட்டுவதற்கு பயன்படுத்தப்படும் மயக்க வாயுக்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நுவரெலியா வைத்தியசாலையில் இரண்டு நாட்களுக்கு சத்திரசிகிச்சைக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஜயந்த பண்டார தெரிவித்தார்.

அந்த இரண்டு நாட்களிலும் வைத்தியசாலையில் அவசர சத்திரசிகிச்சைகள் மாத்திரமே மேற்கொள்ளப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Social Share

Leave a Reply