இன்றைய வானிலை!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (26.08) பல காலகட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக மழையற்ற காலநிலை காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கொழும்பில் இருந்து காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இடியுடன் கூடிய மஹே பெய்யும் சந்தர்பங்களில் மக்கள் அவதானமாக செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Social Share

Leave a Reply