ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளது.
ஒரு குழு பசில் ராஜபக்சவின் பெயரையும், மற்றொரு குழு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் பெயரையும் முன்மொழிந்துள்ளது.
எவ்வாறாயினும், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது அமெரிக்க குடியுரிமையை நீக்குவதற்கு பசில் ராஜபக்ஷ தயக்கத்தை வெளிப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதன் காரணமாக அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்ஷவை நியமிக்க வேண்டும் என கட்சியின் குழுவொன்று வலியுறுத்தியுள்ளது.
எனினும் நாமல் ராஜபக்ச இது தொடர்பில் தனது கருத்தை தெரிவிக்கவில்லை எனவும், அவர் எதிர்க்கட்சிக்கு சென்று அதன் பணியை செய்வதையே விரும்புவதாகவும் அறியமுடிகின்றது.