தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த விபத்தில் 52 பேர் உயிரிழந்துள்ளதுடன், 40 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் போராடியதாகவும், அவசரகால சேவைகள் வழங்கப்படுவதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் தீ விபத்துக்கான காரணம் தெரியவராத நிலையில், அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.