சூதாட்டம் மற்றும் கேமிங் லெவி திருத்தச் சட்டமூலம் உட்பட மேலும் பலதிருத்தங்கள் இன்று(31.08) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன.
சூதாட்டம் மற்றும் கேமிங் லெவி திருத்தச் சட்டமூலம், இலங்கை வரிவிதிப்பு நிறுவனம் ஆகியவற்றுக்கான சட்டமூலங்களுக்கான திருத்த சான்றிதழ்களை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன அங்கீகரித்துள்ளார்.
இதேவேளை, ஆகஸ்ட் 21 2023 முதல் அமலுக்கு வரும் வகையில், 2023 ஆம் ஆண்டின்- சட்ட இலக்கம் 11உடைய பந்தயம் மற்றும் கேமிங் லெவி (திருத்தம்) , 12 ஆம் இலக்க ஒதுக்கீட்டு (திருத்த) சட்டம் மற்றும் 13 ஆம் இலக்க வரிவிதிப்பு நிறுவனம் (ஒருங்கிணைத்தல் திருத்த) சட்டம் என்பன நடைமுறைக்கு வந்துள்ளன.