டிராவிட் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளர்

இந்தியா கிரிக்கெட் அணியின் முன்நாள் வீரரும், தலைவருமான ராகுல் ட்ராவிட் இந்தியா கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராக இன்று நியமிக்கப்பட்டுள்ளார். கிரிக்கெட் ஆலோசனை குழுவை சேர்ந்த திருமதி சுலக்ஷனா நைக் மற்றும் RP சிங் ஆகியோர் ஏக மனதாக இந்தியா அணியின் பயிற்றுவிப்பாளராக ராகுல் ட்ராவிட்டை தெரிவு செய்துள்ளனர்.

ஒரே நேரத்தில் அணிக்குள் வந்த இருவர் தற்போது இந்தியா அணியின் முகாமைத்துவத்துக்குள் மீண்டும் இணைகின்றனர். இந்தியா கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் தலைவரான சரவ் கங்குலி, ராகுல் ட்ராவிட்டை அணிக்குள் வரவேற்றதோடு, அணியிலிருந்து விலக்கவுள்ள ரவி சாஸ்த்திருக்கும் நன்றியினை தெரிவித்துள்ளார்.

தேசிய கிரிக்கெட் அக்கடமியின் தலைமை அதிகாரியாக கடமையாற்றி பல இளைய வீரர்களை இந்தியா அணிக்கு வழங்கியவர் ராகுல் ட்ராவிட். தற்போது இந்தியா அணியில் விளையாடும் பல இளைய வீரர்களது திறமையின் பின்னணியில் உள்ளமை சுட்டிக்காட்டத் தக்கது.

இந்தியா 19 வயதுக்கு உட்பட்ட அணி, இந்தியா A அணி போன்றவற்றுக்கும் இவர் பயிற்றுவிப்பாளராக கடமையாற்றியுளார். இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான தொடரோடு தனது பயிற்றுவிப்பாளர் பதவியினை ராகுல் ட்ராவிட் பொறுப்பேற்கவுள்ளார். ரவி ஷாஸ்திரி நடைபெற்றுக்கொண்டுள்ள 20-20 உலக கிண்ண தொடரோடு பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்த்து விலகவுள்ளார்.

ரவிசாஸ்த்திரியின் பயிற்றுவிப்பில் இந்தியா அணி சிறப்பாக செயற்பட்டு வருகிறது. அதனை அவ்வாறே தொடர “நான் விரும்புகிறேன். தற்போது விளையாடி வரும் வீரர்கள் திறமையானவர்கள். கிரிக்கெட்டினை உணர்வாக கொண்டவர்கள். இவர்களை வழிநடத்தி அணியினை தொடர்ந்தும் சிறப்பாக கொண்டு செல்ல தயாராக இருப்பதாகவும், கிடைத்துள்ள இந்த பொறுப்பு மகிழ்ச்சியை தருவதோடு கெளரமானது எனவும் ராகுல் ட்ராவிட் தெரிவித்துள்ளார்.

டிராவிட் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளர்

Social Share

Leave a Reply