அத்தியாவசிய பொருட்களின் கட்டுப்பாட்டு விலை நீக்கம்

17 அத்தியாவசிய பொருட்களின் கட்டுப்பாடு விலையினை நீக்கியுள்ளதாக விசேட வர்த்தமானி மூலம் நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது.
சீனியின் கட்டுப்பபாட்டு விலையினை நீக்குவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது போல வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. சீனியோடு மேலும் பல பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலைகள் நீக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கும் நிலை காணப்படுகிறது.
வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி மூலம் சீனி, கோதுமை மா, பருப்பு, பெரிய வெங்காயம், உருளை கிழங்கு, பால் மா, கோழி இறைச்சி உட்பட மேலும் பல பொருட்களுக்கு இவ்வாறு விலை கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன.

அத்தியாவசிய பொருட்களின் கட்டுப்பாட்டு விலை நீக்கம்

Social Share

Leave a Reply