கோப் குழு நாளை கூடுகிறது!

கோப் குழு நாளை (04.09) கூடவுள்ளது. இதன்போது துறைமுக அதிகார சபை அதிகாரிகள் அழைக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் அதிகாரிகள் எதிர்வரும் 6ஆம் திகதி கோப் குழு முன் அழைக்கப்படவுள்ளனர். 

களுபோவிட்டிய தேயிலை தொழிற்சாலை அதிகாரிகள் எதிர்வரும் 8ஆம் திகதி COP குழு முன்னிலையில் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இதேவேளை, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு மற்றும் விளையாட்டு அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகள் அடுத்த வாரம் அரசாங்க கணக்கு குழுவிற்கு அழைக்கப்படவுள்ளனர். 

செப்டெம்பர் 6ஆம் திகதி அரசாங்கக் கணக்குக் குழு கூடவுள்ளதாகவும், அன்றைய தினம் அவர்கள் அழைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

Social Share

Leave a Reply