சிகரெட்டின் புதிய விலை

சிகரெட் ஒன்றின் விலை இம்முறை பாதீட்டில் ஐந்து ரூபாவால் அதிகரிக்குமென புகையிலை மற்றும் மதுபானங்களுக்கான தேசிய அதிகார சபையின் தலைவர் கலாநிதி சமதி ராஜபக்ச தெரிவித்துள்ளார். புகையிலை விலையேற்றம் தொடர்பில் புதிய சூத்திரம் ஒன்று புகையிலை மற்றும் மதுபானங்களுக்கான தேசிய அதிகார சபையினால் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், அதனை சுகாதர அமைச்சினூடாக சமர்ப்பித்து அனுமதி பெற காத்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த புதிய சூத்திரத்தின் அறிமுகத்தின் மூலம் அடுத்த ஐந்து வருடங்களில் சிகரெட்டின் விலை 20 ரூபாவினால் அதிகாரிக்குமென அவர் தெரிவித்துள்ளார். சிகரெட் பாவனை மூலமாக ஒரு நாளைக்கு 60 பேர் என்ற கணக்கில் வருடத்துக்கு 22,000 பேர் உயிரிழப்பதாகவும் இதனை கட்டுப்படுத்தவே இந்த நடவடிக்கையினை அறிமுகம் செய்துள்ளதாகவும் புகையிலை மற்றும் மதுபானங்களுக்கான தேசிய அதிகார சபையின் தலைவர் கலாநிதி சமதி ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சிகரெட் பாவனையை குறைப்பதற்கு விலையேற்றம் மாத்திரமே ஒரு சரியான வழியாக அமையுமா? சிகரெட் விலையேற தரமற்ற, அல்லது உடலுக்கு மேலும் பாதிப்பு தரக்கூடிய புகையிலை பாவனைக்கு, அல்லது மாற்று வழிமுறைகளுக்கு பாவனையாளர்கள் செல்லும் வாய்ப்புகளுமுள்ளன. அந்த விடயங்களையும் அரசு கவனத்தில் கொள்வது மக்களை மேலும் பாதுகாக்கும்.

சிகரெட்டின் புதிய விலை

Social Share

Leave a Reply