வாகன இறக்குமதி மீதான தற்போதைய கட்டுப்பாடுகள் இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் தளர்த்தப்படும் என்று நிதி அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து நிதி அமைச்சக அதிகாரிகள் இன்று (05.09) கோப் குழுவிடம் தகவல் அளித்துள்ளனர்.
அதன்படி, தற்போதுள்ள இறக்குமதி கட்டுப்பாடுகள் இந்த ஆண்டு இறுதிக்குள் நீக்கப்படும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், தனிப்பட்ட பாவனைக்காக இறக்குமதி செய்யவது தொடர்பில் விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.