வடகொரியாவை எச்சரிக்கும் அமெரிக்கா!

ரஷ்யாவுக்கு ஆயுதங்களை வழங்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என வடகொரியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.  

வடகொரிய தலைவர் மற்றும் ரஷ்ய ஜனாதிபதிக்கு இடையிலான சந்திப்பு இம் மாதத்தின் இறுதி பகுதியில் நடைபெறவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில்  ரஷ்யாவிற்கு ஆயுதங்களை வழங்கினால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என வெள்ளை மாளிகையின் உயர் அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.  

சர்வதேச சமூகத்தில் இதற்கான விலையை அவர்கள் கொடுப்பார்கள் என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எவ்வாறாயினும்கிம் ஜோங் உன் வருகை தொடர்பில் அமெரிக்காவின் கருத்துக்கு பதில் கூற விரும்பவில்லை என ரஷ்யா பதிலளித்துள்ளது.

Social Share

Leave a Reply