இலங்கையில் இருந்து தாய்லாந்திற்கு கொண்டுச்செல்லப்பட்ட ‘முத்துராஜா’ என்ற யானைக்கு சிகிச்சையளிப்பதற்காக ஒரு குழுவினர் தாய்லாந்து பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தேசிய விலங்கியல் பூங்காவின் கால்நடை சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து பணிப்பாளர் டாக்டர் சந்தன ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் நேற்று (5.09) தாய்லாந்து சென்றுள்ளனர்.
இக்குழுவில் தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் முத்துராஜாவுக்கு சிகிச்சை அளித்த கால்நடை வைத்தியர் மதுஷா பெரேரா மற்றும் சிரேஷ்ட கால்நடை காப்பாளர் நந்துன் அதுலத் முதலி ஆகியோரும் அடங்குகின்றனர்.
தாய்லாந்து அரசின் அழைப்பின் பேரில் இந்த குழு பயணத்தை மேற்கொள்வதாக உயிரியல் பூங்கா துறை தெரிவித்துள்ளது.