உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஹரின் மற்றும் மனுஷவின் கருத்து…

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து பல தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்தத் தாக்குதல்களின் பின்னணியில் மறைமுக சதி இருப்பதாக சிலர் கூறுகின்றனர். அந்த வெளிப்பாடுகள் அனைத்தும் ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னர் நாம் வெளியிட்ட அறிக்கைகளைப் போன்றே உள்ளன என அமைச்சர் ஹரின் மற்றும் மனுஷ தெரிவித்துள்ளனர்.

எனவே, முன்னெப்போதையும் விட, மிகவும் விரிவான மற்றும் பாரபட்சமற்ற விசாரணையின் தேவை மிகவும் வலுவாக வெளிப்பட்டுள்ளது எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

முன்னதாக, ஈஸ்டர் தாக்குதலுக்கு காரணமானவர்கள் மற்றும் அதன் முக்கிய புள்ளிகளாக செயல்பட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று நாடாளுமன்றத்திலும் வெளியிலும் குரல் எழுப்பியதாகவும், அதன் காரணமாகவே அப்போது பல்வேறு தரப்பினரிடமிருந்தும் பல அச்சுறுத்தல்களையும் அவதூறுகளையும் சந்திக்க வேண்டியிருந்ததாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

மேலும், அப்போது எதிர்க்கட்சியை பிரதிநித்துவப்படுத்திய தலைவர்கள் கூட வாயை மூடிக்கொண்டு இருந்தமை தங்களுக்கு ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், நளின் பண்டார, ஹெக்டர் அப்புஹாமி, காவிந்த ஜயவர்தன, முஜிபுர் ரகுமான், எரான் விக்கிரமரத்ன போன்ற பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்தத் தாக்குதல்களின் உண்மையை வெளிக்கொணர தம்முடன் இணைந்து போராடியதை நாம் நினைவுகூருவதாகவும், மிகவும் நம்பிய சில மதத் தலைவர்கள் கூட தங்கள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

ஆனால் அதற்கு சளைக்காமல் தாம் போராடியதாகவும், அதிலிருந்து தொடங்கிய அரசுக்கு எதிரான போராட்டத்தால் கடைசியில் ஆட்சி மாற்றம் கூட ஏற்பட்டதாகவும் அமைச்சர் ஹரின் தெரிவித்துள்ளார்.

“ஒருவன் கடவுளின் ஆலயத்தை இடித்துவிட்டால், கடவுள் அவனை அழித்துவிடுவார். ஏனென்றால் கடவுளின் ஆலயம் பரிசுத்தமானது” என திருவிவிலியதில் கூறப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நெருக்கடியை உருவாக்கி அதிகாரத்தைப் பெற்ற எவராலும் அதை தக்கவைக்க முடியாது என்பதை இயற்கையே நிரூபித்துள்ளதாகவும், வங்குரோத்து நிலை காரணமாக ஒவ்வொரு துறையும் வீழ்ச்சியடைந்த போது அந்தச் சவாலை ஏற்றுக்கொள்ள சில தலைவர்கள் பயந்த போது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டைப் புதுப்பிக்கும் சவாலை ஏற்றுக்கொண்டதாகவும் அவர்கள் மேலும்தெரிவித்துள்ளனர்.

அந்தச் சவால்களை ஓராண்டு குறுகிய காலத்தில் சந்தித்து வெற்றி பெற்றதில் தாம் மகிழ்ச்சி அடைவதுடன்,
அன்று ஏழு தனித்துவமான நிபந்தனைகள் மற்றும் கோரிக்கைகளின் அடிப்படையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து, அவற்றில் ஆறு நிபந்தனைகள் ஏற்கனவே நிறைவெற்றிகொண்டு, மேலும் எஞ்சியிருப்பது “ஈஸ்டர் தாக்குதல்களில்” குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் நீதியின் முன் கொண்டு வந்து அவர்களுக்கு அதிகபட்ச தண்டனையை வழங்குவதுதான் எனவும் அதற்காக சர்வதேச விசாரணை வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள சவால்களை வெற்றிகொள்வதற்கு தாம் அரசாங்கத்துடன் ஒன்றிணைந்த போதிலும் அரசாங்கத்திற்குள் இருந்து கொண்டே ஜனாதிபதியிடம் மேற்படி கோரிக்கையை முன்வைத்தோம்.
தற்போது இந்த விவகாரம் மீண்டும் ஒருமுறை விவாதிக்கப்பட்டுள்ளதால் மீண்டும் இது தொடர்பாக வலுவான கோரிக்கைகளை முன்வைக்கும் சூழல் உருவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஆனால், ஆட்சியில் இருக்கும் போதே தாங்கள் கோரிக்கைகளை முன்வைக்கும் போதும் எதிர்க்கட்சிகள் இது தொடர்பாக குரல் எழுப்பவில்லை என்பது வேதனைக்குரியது எனவும் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலுக்கு முக்கிய காரணமாக செயற்பட்டவர்களை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும். சாக்குப்போக்க்கு சொல்லி உண்மையை மறைக்க முடியாது. இயற்கையின் விதிகளை யாரும் மீற முடியாது. இறுதியில் உண்மை வெல்லும் என சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மற்றும்
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளனர்.

Social Share

Leave a Reply