ஐக்கிய மக்கள் சகதியில் இருந்து தன்னை நிறுத்தியமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் டயானா கமகே உயர் தீமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
20 ஆவது திருத்த சட்டத்துக்கு அரசாங்கத்துக்கு ஆதரவாக வாக்களித்தமைக்காக கட்சியிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டிருந்தவர், கடந்த ஒக்டோபர் மாதம் 08 ஆம் திகதி முதல் கட்சியிலிருந்து முழுமையாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என கட்சியின் பொது செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தன்னை கட்சியால் நீக்கியது சட்டத்துக்கு முரணானது என தெரிவித்து வழக்கு தொடர்ந்துள்ளார். தானே கட்சியினை சஜித் தலைமையிலான குழுவினருக்கு வழங்கியதாகவும், தன்னை கட்சியினால் நிறுத்த முடியாது எனவும் டயானா கமகே ஏற்கனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி