அதிவேக சொகுசு புகையிரத சேவைகள் எதிர்வரும் 8 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது. இரவு 7 மணிக்கு முன்னதாக இயங்கும் புகையிரதங்களே இவ்வாறு ஆரம்பிக்கப்படவுள்ளன.
இரவு 7 மணிக்கு பின்னர் இயங்கும் புகையிரதங்கள் தொடர்பில் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், பயணிகளது பாவனை தேவையினை பொறுத்து அவற்றை இயக்குவது தொடர்பில் முடிவெடுக்கப்படுமென புகையிரத திணைக்கள பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.