மன்னாரில் கடற்றொழிலாளர்களுக்கு காசோலைகள் வழங்கப்பட்டன

நாடளாவிய ரீதியில் 2 இலட்சம் பயனாளர்களை தெரிவு செய்து வலுப்படுத்தும் வேலைத் திட்டத்திற்கு அமைய மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர்கள்மத்தியில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான காசோலைகள் வழங்கும் நிகழ்வு நேற்று(06/11) கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் மன்னார் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

அதனடிப்படையில், மன்னார் மாவட்டத்தில் பாசி வளர்ப்பிற்காக தெரிவு செய்யப்பட்ட 30 பயனாளர்களில் 20 பேருக்கும், கொடுவா மீன் வளர்ப்பிற்காக தெரிவு செய்யப்பட்ட 20 பயனாளர்களில் 4 பேருக்கும் முதற்கட்ட காசோலைகள் வழங்கப்படடன.

பாசி வளர்ப்பிற்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாயும் கொடுவா மீன் வளர்ப்பிற்கு தெரிவு செய்யப்படடவர்களுக்கு 250,000 ரூபாயும் வழங்கப்படவுள்ள நிலையில் முதற் கட்டமாக பாசி வளர்ப்பாளர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் கொடுவா மீன் வளர்ப்பாளர்களுக்கு தலா 125,000 ரூபாயும் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மன்னாரில் கடற்றொழிலாளர்களுக்கு காசோலைகள் வழங்கப்பட்டன

Social Share

Leave a Reply