ஹபரண – ஹூருலு பூங்காவில் நேற்று இடம்பெற்ற சஃபாரி வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் எட்டு பேர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த வாகன விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அதற்கமைய விபத்துக்குள்ளான குறித்த சஃபாரி வாகனத்தை செலுத்திய சாரதிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று பிற்பகல் மேற்கொள்ளப்பட்ட சஃபாரி சேவையின் போது காட்டு யானையொன்று குறிக்கிட்டமையினால், வாகனத்தை பின்னால் செலுத்திய சந்தர்ப்பத்தில் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் சிறுவர்கள் நால்வர் உட்பட எட்டு பேர் காயமடைந்துள்ள நிலையில் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சஃபாரி வாகனமொன்றில் ஆறு பேர் மாத்திரமே பயணிக்கும் நிலையில், 11 பேரை ஏற்றிச் சென்ற குற்றச்சாட்டுக்கு அமையவே, அதன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
