இலங்கையில் ஆபத்தில் உள்ள புற்றுநோயாளர்கள்!

காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவில் உள்ள புற்றுநோய் கதிர்வீச்சு இயந்திரம் உடைக்கப்பட்டுள்ளதால் கதிரியக்க சிகிச்சைக்கு உட்படுத்த வேண்டிய புற்றுநோயாளிகளின் நிலை கவலைக்கிடமாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காலியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அகில இலங்கை மருந்து விநியோகஸ்தர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவி கலன்சூரிய இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

தற்போதுவரை இந்த இயந்திரம் சீர் செய்யப்படவில்லை எனவும், இது தொடர்பில் வைத்தியசாலை அதிகாரிகள் சுகாதார அமைச்சுக்கு அறிவித்தும் தீர்வு காணப்படவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இயந்திரம் பழுதடைந்துள்ளதனால்,  30 புற்றுநோயாளர்கள் ஆபத்தான நிலையில் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்க வைத்தியசாலைகளில் மருந்துப் பற்றாக்குறைக்கு மேலதிகமாக சில நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்குத் தேவையான இயந்திரங்கள் பழுதடைந்து காணப்படுவதாகவும், அந்த இயந்திரங்களை சீர்செய்வதற்கும் வழியில்லை எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Social Share

Leave a Reply