வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன், ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்திப்பதற்காக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கிம் ஒரு சிறப்பு ரயிலில் ரஷ்யாவிற்கு செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது. இருநாட்டு தலைவர்களுக்கு இடையிலான குறித்த சந்திப்பு வரும் புதன்கிழமை இடம்பெறும் எனக் கூறப்படுகிறது.
கிம்மின் இந்த பயணத்தை உறுதிசெய்ய புலனாய்வாளர்களை தொடர்புகொண்ட நிலையில், அந்த முயற்சி தோல்வியில் முடிந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஒருவேளை கிம் ஜொங் உன்னின் இந்த பயணம் உறுதி செய்யப்படும் பட்சத்தில் தொற்றுநோய்க்கு பிந்தைய காலத்தில் ஏறக்குறைய நான்கு ஆண்டுகளுக்கு பிறகு கிம் ஜொங் உன் மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டு பயணமாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்விரு நாடுகளின் தலைவர்கள் சந்திப்பை சர்வதேச நாடுகள் உன்னிப்பாக அவதானித்து வருவதாக கூறப்படுகின்றது.
குறிப்பாக உக்ரைன் – ரஷ்ய போர் தீவிரமடைந்துள்ள நிலையில், கிம் ஜாங்க உன், புட்டினை சந்திப்பது அணுவாயும் குறித்த அச்சுறுத்தல்களையும் எழுப்பியுள்ளது.