ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான மேலதிக நாளான இன்றைய(11.09) இரண்டாம் நாளில் போட்டி ஆரம்பிக்கும் நேரமான 3 மணிக்கு போட்டி ஆரம்பிக்கவில்லை.
1.35 அளவில் ஆரம்பித்த மழை 1 மணி நேரமாக கடுமையாக பெய்தமையினால் மைதான விரிப்புகள் நீரினால் நிரம்பியுள்ளன. விரிப்புகளுக்கு மேலுள்ள நீர் அகற்றப்பட்டு மீண்டும் மூடப்படுகிறது.
இரு அணி வீரர்களும் மைதானத்துக்கு வருகை தந்துள்ளனர். நேற்று நிறைவடைந்த இடத்திலிருந்து போட்டி இன்று ஆரம்பிக்க வேண்டும். ஆனால் அதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாக தென்படுகின்றன.
மைதானத்துக்கு மேலே கரு முகில் கூட்டங்கள் நிறைந்து வருகின்றன. மீண்டும் கடும் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.
இன்று போட்டி நடைபெறாவிட்டால் இரு ஒவ்வொரு புள்ளி வழங்கப்படும். இரவு 10.26 மணிக்கு பாகிஸ்தான் 20 ஓவர்களாக தமது துடுப்பாட்டத்தை ஆரம்பிக்க முடியும். அதற்கான வாய்ப்புகளும் இல்லாத நிலையிலேயே போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்படும்.
மைதான நிலவர வீடியோ