ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழுக்கூட்டம் இன்று (10.09) கட்சி தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளது.
கொழும்பு, டார்லி வீதியிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், ஜனாதிபதி தேர்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.