மழையை தோற்கடித்த இந்தியாவின் ஓட்ட மழை

இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி தொடரின் சுப்பர் 04 போட்டி மேலதிக நாளில் ஆர்மபித்து நடைபெற்று வருகிறது. இந்திய அணி தமது துடுப்பாட்டத்தை நிறைவு செய்துள்ளது.

பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹரிஸ் ராப் சுப்பர் 04 தொடரில் பந்துவீச மாட்டார் என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. கையில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அவர் விளையாடமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று பிற்பகல் 5.10 மணிக்கு மழை ஆரம்பித்தது. மழை காரணமாக போட்டி நிறுத்தப்பட்டது. இரவு 9 மணிக்கு ஆரம்பிக்கும் வாய்ப்புகள் ஏற்பட்ட நிலையில் மீண்டும் மழை பெய்தமையினால் போட்டி நிறுத்தப்பட்டு இரண்டாம் நாளான இன்றைய தினத்துக்கு மாற்றப்பட்டது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. பிரேமதாச மைதானத்தில் இது வழமைக்கு மாறான முடிவு. இந்திய அணி முதலில் துடுப்பாட விரும்பியதாக ரோஹித் ஷர்மா தெரிவித்திருந்தார்.

துடுப்பாட்டத்தில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் அதிரடியான ஆரம்பம் ஒன்றை வழங்கினர். ரோஹித் ஷர்மா, சுப்மன் கில் ஆகிய இருவரும் 121 ஓட்டங்களை பகிர்ந்து அரைச்சதங்களையும் பூர்த்தி செய்தனர். ஷதாப் கான் மோசமாக அடிவாங்கிய போதும் முதல் விக்கெட்டினை கைப்பற்றினார். ரோஹித் ஆட்டமிழந்து 7 பந்துகளில் கில் ஆட்டமிழந்தார். அதன் பின் விராத் கோலி, லோகேஷ் ராகுல் நிதானமான இணைப்பாட்டம் ஒன்றை ஏற்படுத்தி இன்னிங்ஸை கட்டியெழுப்பினர். 24.1 ஓவர்களில் 02 விக்கெட்டினை இழந்து 147 ஓட்டங்களை பெற்ற நிலையில் இன்று போட்டி ஆரம்பித்துள்ளது.

விராத் கோலி மற்றும் லோகேஷ் ராகுல் ஆகிய இருவரும் நிதானமாக இணைப்பாடத்தை கட்டி எழுப்பினார்கள். வேகம் குறைந்து காணப்பட்ட போதும் அரைச்சத இனிப்பாட்டத்தை நெருங்கும் போது வேகத்தை ஆரம்பித்தனர். குறிப்பாக உபாதையிலிருந்து மீண்ட லோகேஷ் ராகுல் ஆரம்பத்தில் மிகவும் மெதுவாக துடுப்பாடியவர், பின்னர் வேகமாக அடித்தாடி ஓட்டங்களை குவித்தார். தனது ஆறாவது சதத்தை பூர்த்தி செய்து அபாரமான மீள் வருகையினை பதிவு செய்துள்ளார். இந்த மீள் வருகை இந்திய அணியின் நான்காமிட சிக்கலை தீர்த்துள்ளது என நம்பலாம். ராகுல் 3000 ஓட்டங்களையும் கடந்தார்.

மறுபுறத்தில் விராத் கோலி சிறந்த துடுப்பாட்ட பிரயோகங்களை மேற்கொண்டார். அவர் பக்கமாகவும் ஓட்டங்கள் அதிகரித்தன. சத இணைப்பாட்டத்தை வேகமாக இருவரும் கடந்தனர். 143 பந்துகளில் 150 ஓட்ட இணைப்பாட்டத்தை கடந்தனர். விராத் கோலி அரைச்சதத்தின் பின்னர் அதிரடி நிகழ்த்தி வேகமாக சதத்தையும் கடந்தார். இருவரும் 233 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்தனர்.

விராத் கோலி 47 ஆவது சதத்தை பூர்த்தி செய்ததோடு 13,000 ஓட்டங்களையும் கடந்தார். ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் 13,000 ஓட்டங்களை கடந்த ஐந்தாவது வீரராக கோலி தனது பெயரை பதிவு செய்தார்.

32.5 ஓவர்களில் இந்தியா அணி 200 ஓட்டங்களை தொட்டது. 45 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 300 ஓட்டங்களை பூர்த்தி செய்தது இந்தியா அணி. 50 ஓவர்கள் நிறைவில் 02 விக்கெட்கள் இழப்பிற்கு 356 ஓட்டங்களை பெற்று இன்னிங்ஸை நிறைவு செய்தது.

பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சாளர்கள் பிரகாசிக்க தவறியுள்ளனர். இந்த ஓட்ட இலக்கை அவர்கள் துரத்திப் பிடிப்பது இலகுவானது அல்ல. ஆனாலும் போராடுவார்கள் என நம்பலாம்.

சுப்பர் 04 சுற்றில் பாகிஸ்தான் அணி பங்களாதேஷ் அணியை வெற்றி பெற்றுள்ள நிலையில் இன்று வெற்றி பெற்றால் அவர்களின் அடுத்த சுற்று வாய்ப்பு அதிகரிக்கும். இந்தியா அணி முதற் போட்டியில் விளையாடும் நிலையில் அவர்களுக்கு வெற்றி ஒன்று அவசியமாக தேவைப்படுகிறது. இந்த இரு அணிகளது போட்டி முடிவுகளும் இலங்கை அணியின் வாய்ப்பிலும் தாக்கம் செலுத்தும்.

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
ரோகித் சர்மாபிடி – பஹீம் அஷ்ரப் ஷதாப் கான்564964
சுப்மன் கில்பிடி – அகா சல்மான்ஷகீன் ஷா அப்ரிடி5852100
விராட் கோலி  1229493
லோகேஷ் ராகுல்  111106122
இஷன் கிஷன்      
ஹார்டிக் பாண்ட்யா      
ரவீந்தர் ஜடேஜா      
ஷர்ட்டூல் தாகூர்      
குல்தீப் யாதவ்      
ஜஸ்பிரிட் பும்ரா      
மொஹமட் ஷிராஜ்      
உதிரிகள்  09   
ஓவர்  50விக்கெட்  02மொத்தம்356   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்டவிக்
ஷகீன் ஷா அப்ரிடி10007901
நசீம் ஷா9.2015300
பஹீம் அஷ்ரப் 10007400
ஹரிஸ் ரவுஃப்05002700
ஷதாப் கான்10017101
இப்திகார் அகமட்5.4005200

அணி விபரம்

ரோஹித் ஷர்மா(தலைவர்), சுப்மன் கில், விராத் கோலி, இஷன் கிஷன், ஹார்டிக் பாண்ட்யா, ரவீந்தர் ஜடேஜா, ஜஸ்பிரிட் பும்ரா, ஷர்ட்டூல் தாகூர், குல்தீப் யாதவ், மொஹமட் ஷிராஜ், லோகேஷ் ராகுல்

பாபர் அசாம் (தலைவர்), முகமட் ரிஸ்வான், ஃபகார் ஷமான், இமாம் உல் ஹக், இப்திகார் அகமட், அகா சல்மான், ஷதாப் கான், ஷகீன் ஷா அப்ரிடி, ஹரிஸ் ரவுஃப், நசீம் ஷா, பஹீம் அஷ்ரப்

Social Share

Leave a Reply