நாட்டில் மீண்டும் கொவிட் தொற்று பரவல் தலைத்தூக்கியுள்ளதாக பிரதி சுகாதார பணிப்பாளர் ஜெனரல் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் சுகாதார வழிமுறைகளை முறையாக பின்பற்றாது, பொதுநடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதனை அவதானிக்கக்கூடியதாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், சமய நிகழ்வுகளின் போது பொது மக்கள் பலரும் முகக்கவசங்களை அணியாதிருப்பதாகவும் மற்றும் புகைப்படங்கள் எடுக்கும் சந்தர்ப்பங்களில் முகக்கவசங்களை முற்றாக அகற்றி விடுவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறு கவனமின்றி செயற்படுகின்றமையானது, பாடசாலை மாணவர்களுக்கிடையில் மிக விரைவில் தொற்று பரவலை ஏற்படுத்திவிடும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
