மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி இன்று இலங்கையை வந்தடைந்துள்ளது.
அதற்கமைய இன்று காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை மேற்கிந்திய தீவுகள் அணி வந்தடைந்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது.
இம்மாதம் 21 தொடக்கம் 25ஆம் திகதிகளில் முதலாவது டெஸ்ட் போட்டியிலும் 29 தொடக்கம் டிசம்பர் 3ஆம் திகதி வரை இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும்;, இலங்கை மற்றும் மேற்;கிந்திய தீவுகள் அணிகள் விளையாடவுள்ளன.
அதற்கமைய குறித்த போட்டி தொடர் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
மேலும் 14 தெடக்கம் 17ஆம் திகதிகளில் இரு அணிகளும் கொழும்பில் பயிற்சி போட்டியில் விளையாடவுள்ளன.