தினந்தோறும் பதிவாகும் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இலங்கையில் ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 100 புதிய புற்றுநோயாளிகள் இனங்காணப்படுவதாக தேசிய புற்றுநோய் திட்டம் தெரிவித்துள்ளது. 

துரித உணவு மற்றும் பல்வேறு பானங்கள் போன்றவை புற்றுநோய் நோயாளிகளின் வளர்ச்சிக்கு மறைமுகமாக தாக்கம் செலுத்துவதாக தேசிய புற்றுநோய் திட்டம் கூறியுள்ளது.

இது குறித்து வெளியாகியுள்ள அறிவிப்பின்படி,  வருடாந்தம் 35,000 தொடக்கம் 40,000 வரையான புற்று நோயாளர்கள் பதிவாகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதற்கிடையில், செப்டம்பர் மாதம் சர்வதேச குழந்தை பருவ புற்றுநோய் மாதமாக பெயரிடப்பட்டுள்ளது. அதன்படி, 19 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையே புற்றுநோய் பரவி வருவதாகவும் தெரிகிறது.  வருடாந்தம் 750 தொடக்கம் 800 சிறுவர்கள் புற்று நோயினால் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply