வேற்று கிரக உயிர்கள் இருப்பதை தாம் நம்புவதாக நாசா விண்வெளி ஆய்வு மன்றத்தின் தலைவர் பில் நெல்சன், தெரிவித்துள்ளார்.
வொஷிங்டனில் நேற்று (14.09) இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் மற்றும் அதுபோன்ற நிகழ்வுகள் குறித்து விசாரணை நடத்த புதிய பணிப்பாளர் ஒருவரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில், மெக்சிகோவில் இரண்டு வேற்று கிரக உடல்கள் பொதுவெளியில் வெளிப்பட்டதன் காரணமாக வேற்று கிரக உயிரினங்களை ஆராய்வதில் உலகின் கவனம்திரும்பியுள்ளமை குறித்தும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
2017 இல் பெருவில் கண்டெடுக்கப்பட்ட வேற்று கிரகவாசிகளின் இரண்டு உடல்கள் தொடர்பிலும்ம் அவை
700 முதல் 1800 ஆண்டுகள் பழமையானவை என அடையாளம் காணப்பட்டுள்ளமை தொடர்பிலும் அவர் தகவல் வெளியிட்டுள்ளார்.