தேசிய சாம்பியன்ஷிப் விமான போட்டியில் விபத்து – இருவர் பலி!

அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தில் உள்ள ரெனோ நகரில் நடந்த தேசிய சாம்பியன்ஷிப் ஏர் ஷோவில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு விமானிகள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விமான கண்காட்சி வேளையில் இரண்டு விமானங்கள் தரையிறங்கும் போது விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்து குறித்து அந்நாட்டின் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம், பெடரல் ஏவியேஷன் நிர்வாகம் மற்றும் உள்ளுராட்சி அமைப்புகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் சரவதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Social Share

Leave a Reply