பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் தியாக தீபன் திலீபனின் நினைவேந்தல் வாகன பேரணி மீதும் நடத்தப்பட்ட தாக்குதலுடன் தொடர்புடைய ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த மோசமான சம்பவம் தொடர்பில் சீனக்குடா காவல்துறையினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 59 வயதுடைய ஆண்கள் இருவரும், 45 வயதுடைய ஆண் ஒருவரும், 35 வயதுடைய இரண்டு பெண்களும், 56 வயதுடைய ஆண் ஒருவரும் அடங்குவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சட்டவிரோதமாக ஒன்றுகூடியமை மற்றும் தாக்குதல் நடத்தியமை எனும் குற்றச்சாட்டின் பேரில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் 6 பேரும் எதிர்வரும் செப்டம்பர் 21ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக, சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.